டில்லி

பெட்ரோல் நிலையங்களில் மின்சார வாகனங்களை சார்ஜி செய்யும் வசதியை அளிக்க அரசு உத்தேசித்துள்ளது.

உலகெங்கும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் அதிகரித்து வருவதும் ஒன்றாகும். இந்த மாசாவதை தடுக்க உலக நாடுகள் பலவற்றில் மின்சார வாகன உபயோகம் பரவாஅகி வருகிறது. இந்தியாவும் மின்சார வாகன உபயோகத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் நிதி அயோக் வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களும் மின்சாரத்தில் இயங்கும் வண்ணம் தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இனி தயாரிக்கப்பட உள்ள அனைத்து 100 சிசிக்கு குறைவான இரு சக்கர வாகனங்கள் மின்சாரத்தில் இயங்கும் வண்ணம் தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது

இந்தியாவில் மின்சார பேருந்துகள் தற்போது உபயோகத்துக்கு வர தொடங்கி உள்ளன. ஆயினும் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அதிக கிராக்கி இல்லாமல் உள்ள்து. இதற்கு முக்கிய காரணம் சார்ஜிங் நிலையங்கள் இல்லாததே ஆகும்.

அத்துடன் பெட்ரோல் நிலைய உரிமையாலர்களும் இதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என கவலையை தெரிவித்துள்ளனர்.. இதை ஒட்டி மத்திய அரசு ஒரு புதிய திட்டம் ஒன்றை செயலபடுத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் மின் வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதியை ஏற்படுத்த அரசு உத்தேசித்து வருகிறது. தற்போது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நடத்தி வரும் 60 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களிலும் புதியதாக தொடங்கப்படும் பெட்ரோல் நிலையங்களிலும் மின்சார சார்ஜிங் வசதி அளிப்பதை கட்டாயமாக்க ஆலொசிக்கபட்டுள்ளது.