புதுக்கோட்டை:

புதுக்கோட்டை பகுதியில் அரசு பேருந்து இயக்கிய ஓட்டுநர் சுமார் 20 கி.மீட்டர் தூரம் வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டே பஸ்சை ஓட்டியதால் அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அந்த ஓட்டுநர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப் பட்டார்.

புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை சென்ற அரசு பேருந்தில் சுமார் 20கிலோ மீட்டருக்கு மேலாக செல்போனை பார்த்துக்கொண்டே பேருந்தை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார். பஸ் ஆலங்குடியை கடந்ததும் பேருந்தின் ஓட்டுநர் தனது பாக்கெட்டில் இருந்த ஸ்மார்ட்போனை எடுத்து வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளத்தை பார்க்கத் தொடங்கினார். ஒரு கையில்  ஸ்டீரியங்கை பிடித்துக்கொண்டும், மொபைல் போனை பார்த்துக்கொண்டும் அவர் பஸ் ஓட்டியதைக் கண்ட பயணிகள் அச்சத்தோடு பயணிகள் பேருந்தில் அமர்ந்திருந்தனர்.

பின்பு ஏதோ அவசரத்துக்கு மெசேஜை பார்க்கிறார் என்று நினைத்தப் பயணிகளுக்கு ஒரு அதிர்ச்சி. தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் வரை அதிர்ச்சி என்னவென்றால், ஆலங்குடியில் செல்போனில் வாட்ஸ்ஆப் பார்க்கத் தொடங்கிய ஓட்டுநர் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் வரை சுமார் 20கிலோ மீட்டருக்கு மேலாக செல்போனிலேயே அடிக்கடி மூழ்கியபடி பேருந்தை இயக்கியுள்ளார்.

டிரைவரின் இந்த செயலுக்கு சக பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இதை ஓட்டுநரின் அருகே பயணித்த பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார், இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இதையடுத்து, அந்த டிரைவர் மீது புதுக்கோட்டை மண்டல போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். மொபைலை பார்த்துக்கொண்டே பஸ் ஓட்டிய அந்த டிரைவர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார். அந்த ஓட்டுநரின் பெயர் மூக்கையா என்றும், அவர் ஆலங்குடியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.