சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்டு 5ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலை யில், இன்று பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தமிழகஅரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லுரிகளில்  இளநிலை பட்டப் படிப்புகளில் சேர 4 லட்சத்து 7,045 மாணவர்கள் பதிவு செய்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 70 ஆயிரம் பேர் வரை கலை, அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தனர். ஆனால், 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் 3-ம் தேதி வெளியிடப்பட்டது.

தொடர்ந்து ஆகஸ்டு 5ந்தேதி முதல்  மாணவர் சேர்க்கை இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது. முதல்நாள் சிறப்பு விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர் உள்பட  சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு கேட்டகிரி வகையில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து, இன்றுமுதல்   பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. வரும் 17ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

‘தினந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் வரவழைக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது. மதிப்பெண், கட் – ஆப், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது.