புனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும்,  100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே மாநிலத்தில் உள்ள சீரம்  மருத்து தயாரிப்பு நிறுவனத்துக்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலை முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் 7 மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டு சோதனைகளை செய்து வருகின்றன. ஏழு நிறுவனங்களுக்கு முன் மருத்துவ பரிசோதனை, பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றிற்கான COVID-19 தடுப்பூசியை தயாரிப்பதற்கான உரிமத்தை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது,

தற்போது பல நிறுவன தடுப்பூசிகள் 3வது கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து வரும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் கொரோனா தடுப்பூசிகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள  புனே நகரை சேர்ந்த சீரம்  இன்ஸ்டிடியூட், கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் முன்னிலை வகித்துவருகிறது. இந்நிறுவனம்  இங்கிலாந்து  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியை  இந்தியாவில் பரிசோதித்து, உற்பத்தி செய்து வருகிறது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவில்   ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், புனே நகரை சேர்ந்த மற்றொரு மருந்து உற்பத்தி நிறுவனமான ஜெனோவா பயோ பார்மா, அமெரிக்காவின் எச்.டி.டி. பயோ இன் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துபரிசோதனை செய்து வருகிறது. அமெரிக்காவின் பைசர், மாடர்னா நிறுவனங்களின் கரோனாதடுப்பூசி மாதிரியை பின்பற்றி ஜெனோவா பயோ பார்மாவின்தடுப்பூசி தயாரிக்கப்படுவதால் சர்வதேச அளவில் இந்த தடுப்பூசியின் மதிப்பு உயர்ந்துள்ளது.

இந்த தடுப்பூசியின் சோதனை உலகின் பல நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து மற்றும் பிரேசிலில் ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள  AZD1222 ன் மருத்துவ பரிசோதனைகளின் இடைக்கால பகுப்பாய்வின் நேர்மறையான முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில், கொரோனா தொற்று பரவலை  தடுப்பதில் தடுப்பூசி மிகவும் பயனுள்ளதக இருப்பதாக, தயாரிப்பு நிறுவனம்  அஸ்ட்ராஜெனெகா  தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் சோதனை செய்தும், தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார்பூனவல்லா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வைரஸ் தடுப்பூசி  மருந்து விரைவில் உலக அளவில் கிடைக்கும் என்றும், இந்த தடுப்பூசி டிசம்பர் மாதத்திற்குள் 100 மில்லியன் டோஸ் தயார் செய்ய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இலக்கு வைத்துள்ளதாகவும்,  இதையடுத்து, 2021ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரி மாதத்தில்,  இந்து மருந்து கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும்,  இதற்கு ஏற்கனவே   நிர்ணயிக்கப்பட்ட விலையான 500 அல்லது 600 ரூபாயில் இருந்து  பாதி விலையில் இந்தியாவுக்கு க்கும்  கிடைக்கும் என்றும் என்றும் அந்நிறுவன தலைமை அதிகாரி அதார்பூனம்வல்லா தெரிவித்திருந்தார்.

கொரோனாதொற்று பரவலை தடுக்க இந்த கோவிஷீல்டு தடுப்பூசி  2 முறை இரு டோஸ்களாக  போட வேண்டிய தடுப்பூசியாகும்.  இதன் பலன் வெற்றிகரமான அமைந்துள்ளதால், பல நாடுகள், இந்த தடுப்பூயை பெற ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால்,  வரும் 2021-ம் ஆண்டில் 300 கோடி ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய  சீரம் இன்ஸ்டிடியூட் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் 50 சதவீதம் இந்தியாவுக்கும் 50 சதவீதம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

இந்த பின்னணியில் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் ஜெனோவா பயோ பார்மா நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளை பெறுவது தொடர்பாக 100 நாடுகளை சேர்ந்த தூதர்கள், பிரதிநிதிகள் வரும் டிசம்பர் 14-ம் தேதி புனேவுக்கு வருகின்றனர்.  அவர்கள் இரு நிறுவனங்களின் ஆலைகளுக்கும் சென்று கரோனா தடுப்பூசி உற்பத்தியை பார்வையிட உள்ளனர். தொடர்ந்து,  நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி தன்னார்வலர்களின்  நிலையை மறுஆய்வு செய்வதையும், அதன் வெளியீடு, உற்பத்தி மற்றும் விநியோக வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்வதையும் நோக்கமாக அவர்கள் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களின் வருகை நவம்பர் 27 ஆம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 4ந்தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்வில், பிரதமர் மோடி கலந்துகொள்வது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனார்ல, பிரிமர் மோடி , “பிரதமர் நரேந்திர மோடியும் புனே நகருக்கு  விரைவில் வருகை தருவார் என்று எதிர்பார்ப்பதாகவும்,  பிரதமர் மோடி புனேவுக்கு வருகை தந்தால் சீரம் இன்ஸ்டிடியூட், ஜெனோவா பயோ பார்மா நிறுவனங்களுக்கு செல்வார். கொரோனா தடுப்பூசிகளின் நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்வார்” என்று புனே மாநகராட்சியின் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சுரப் ராவ்  தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் 8 மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா தடுப்பு மருந்துகளை சேமித்து வைக்க தேவையான குளிர்சாதன கிடங்குகளை அமைக்குமாறு முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.