நெட்டிசன்

டந்த மாதம் சேலம் மாவட்டத்தில் நடந்த அந்த சோகத்தை அத்தனை விரைவில் யாரும் மறந்திருக்க முடியாது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பச்சினம்பட்டியை சேர்ந்த  சக்தி – மங்கையர்கரசி தம்பதியரின் ஒரே மகள் பாக்யஸ்ரீ .

பதினேழே வயாதான சுட்டிப பெண் பாக்யஸ்ரீ பாலிடெக்னிக்  முதலாம் ஆண்டு முடித்து இரண்டாம் ஆண்டு செல்ல இருந்தார்.

பாக்யஸ்ரீ – கவர்னர் வித்யாசாகருடன் நவீன் பாலாஜி

கொஞ்சம் பூசினாற்போல இருந்த பாக்யஸ்ரீக்கு, தன்னுடைய உடலைக் குறைக்க விரும்பினார். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள கந்தசாமியூரில் நவீன் பாலாஜி என்பவர் நடத்தி வரும் “ஹெர்போகேர் இயற்கை மருத்துவமனை”யில் சேர்ந்தார்.

புன்னகையுடன் மருத்துவனையில் சேர்ந்த பாக்யஸ்ரீ, பிணமாகத்தான் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டார்.

முறையாக மருத்துவம் படிக்காத நவீன் பாலாஜி என்பவர், இயற்கை மருத்துவம் என்கிற  பெயரில் தவறான சிகிச்சை அளித்ததே மாணவி பாக்யஸ்ரீயின்  மரணத்துக்குக் காரணம் என்று பெற்றோர் போராடினர். இதையடுத்து காவல்துறையும் “மருத்துவர்”(?) நவீன் பாலாஜி மீது  வழக்கு  பதிந்திருக்கிறது.

இது ஒரு புறம்.

இன்னொரு புறம், பெரும் வி.ஐ.பிக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து தனது மருத்துவமனையில் வைத்திருக்கிறாரா் நவீன் பாலாஜி.

அந்த பிரபலங்களில் ஒருவர் தமிழக (பொறுப்பு) கவர்னர்  வித்யாசாகர்.

ஒரு மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரம் உள்ளவர் கவர்னர். அதுவும் தற்போதைய தமிழக சூழலில் அவர் இன்றி அணுவும் அசையாது.  அப்படி இருக்கையில் தன்னைத் தேடிவருபவர்கள், புகைப்படம் எடுத்துக்கொள்பவர்களை குறித்து ஆராயந்து அனுமதிப்பதுதானே முறை? தவிர கவர்னருக்கு என்று வானளாவிய அதிகாரம் இருக்கிறதே ஒழிய, பொறுப்பு என்று ஏதுமில்லை.

ஆக, தன்னை நாடி வருபவர்களை எளிதாக விசாரிக்க அனைத்து அதிகாரங்களும் இருக்கும் நிலைியல் கவர்னர்(கள்) இதைச் செய்ய மறுப்பது ஏன்?

சில ஆண்டுகளுக்கு முன், சென்னை கவர்னர் மாளிகையில் இடைத்தரகர்கள் கோலோச்சுகிறார்கள் என்று வெளிப்படையாகவே செய்திகள் வெளியாகின. போலி மருத்துவர்கள், போலி பல்கலைக் கழகம் (!) நடத்துபவர்களின் விழாக்களில் எல்லாம் அப்போதைய கவர்னர் கலந்துகொள்கிறார் என்றும் அதற்கு  இடைத்தரகர்களே காரணம் என்றும் செய்திகள் வெளியாகின.  அப்படியானால் இடைத்தரகர்கள் நினைத்தால் எதையும் செய்யலாமா.. எவருடனும் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா?

இப்படி எடுக்கப்படும் புகைப்படங்களை வைத்துத்தான் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள், போலி மருத்துவர்கள் மற்றும் மோசடிப் பேர்வழிகள். அதாவது விளம்பரமாகவும் பயன்படுத்திக்கொள்வதோடு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

தரமில்லாத பொருட்களின் விளம்பரங்களில் நடித்தால், சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீதும் வழக்கு பதிய வேண்டும் என்று சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்படி இருக்கையில், மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆளுநர் போன்றவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டாமா?

(வாட்ஸ்அப்)