சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து, அநாநகரிகமாகவும், அவதூறாகவும்  விமர்சனம் செய்த திமுக திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் தமிழ்நாடு, தமிழகம் பேச்சு மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, திமுகவும், அதன் கூட்டணி கட்சியினரும் ஆளுநரை ஒருமையுலும் தரக்குறைவாகவும், மிரட்டல்விடுக்கும் வகையிலும் பேசி வருகின்றனர். இந்த நிலையில், கடநத் வாரம் திமுக கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அநாகரிமாக பேசினார். அவரது பேச்சு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஆளுநர் ரவி குறித்து அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகையின் துணைச்செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் புகார் வழங்கப்பட்டது.

ஆனால், புகார் பதியாத காவல்துறை, இதுதொடர்பாக திமுக  அரசின் அனுமதி கோரியது. இதுவும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. புகார் மீது சம்பந்தப்பட்ட நபரை அழைத்து விசாரித்து வழக்கு பதிவு செய்ய வேண்டிய காவல்துறை, மாநில அரசிடம் அனுமதி கோரிய விவகாரமும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு ஆளுநர் தரப்பில் அவரது  செயலாளர், திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், கிருஷ்ணமூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக பேச்சாளருக்கு எதிராக ஆளுநர் தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.