டெல்லி: ஜிஎஸ்டி இழப்பீட்டை நிறுத்தியதால் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் நிதிநிலை பாதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டதால், பல  மாநிலங்களின் பொருளாதாரம் “மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்” என்று மாநில நிதி தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டதன் காரணமாக, மாநிலங்களுக்கான  சராசரி வரி வருவாயில் 10% ஐ தாண்டியுள்ளது என்றும்,  கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட குறைந்தது 10 மாநிலங்கள், அவர்களின் பட்ஜெட் மதிப்பீட்டின்படி, எதிர்பார்க்கப்படும் 14% ஜிஎஸ்டி வளர்ச்சியில் இருந்து குறையும் என்று சுட்டிக்காட்டி உள்ளது. இதில், ஜிஎஸ்டி இழப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு நிறுத்துவதால் தமிழ்நாடு உள்பட ஆறு முக்கிய மாநிலங்களின் நிதி நிலை கடுமையாக பாதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட தொடங்கியது முதல் கடந்த 5 ஆண்டுகளில்,   இழப்பீடு பெற்ற முதல் ஐந்து மாநிலங்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மலாநிலங்கள், இழப்பீடு நிறுத்தப்பட்டதால் அம்மலாநிலங்களில் நிதிநிலை பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

அதுபோல,  புதுச்சேரி, பஞ்சாப், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகும், இவற்றுக்கான வரி வருவாயில் ஜிஎஸ்டி இழப்பீட்டின் பங்கு சராசரியாக 10% ஐத் தாண்டியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் ஐந்து ஆண்டு காலத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களே அதிகபட்ச ஜிஎஸ்டி இழப்பீடு பெற்றுள்ளன. ஜிஎஸ்டி இழப்பீட்டை நிறுத்துவதால் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் நிதிநிலை கடுமையாக பாதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன், சில மாநிலங்களில்  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதும் மாநில அரசுகளை பெரும் நிதி சுமையில் தள்ளிவிடும் என ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

ஏற்கெனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளன. தற்போது அண்மையில் இமாசலப் பிரதேச அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது, தமிழ்நாடும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.