தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – டி.என்.பி.எஸ்.சி.-க்கு புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.பி. சிவனருள், ஐ.ஆர்.எஸ். அதிகாரி சரவணகுமார், மருத்துவர் தவமணி, உஷா சுகுமார், முனைவர் பிரேம்குமார் ஆகிய ஐந்து பேரை தமிழக அரசு பரிந்துரை செய்ததை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

இதனை அடுத்து மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் மூன்று உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலையில் முனைவர் அருள்மதி, பொருளாதாரப் பேராசிரியர் ஜோதி சிவஞானம், எம். ஆரோக்கியராஜ், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி முனியநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதன் தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபு-வின் பரிந்துரையை ஆளுநர் நிறுத்திவைத்த நிலையில் முனியநாதன் பொறுப்புத் தலைவராகச் செயல்பட்டுவருகிறார்.

தற்போது புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியாகாமல் உள்ள பல போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.