சென்னை:
ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடத்த அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா இரண்டாம் அலை முழுவதுமாக முடியாத நிலையில், பண்டிகை காலங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டம் கூடும் இடங்களுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். உரியக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே 3-வது அலையைத் தவிர்க்க இயலும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel