கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிப்பு

Must read

சென்னை: 
மிழகத்தில் செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஒருவர் வீதம் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிஞர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2010 -ஆம் ஆண்டுக்கான விருதுக்கு முனைவர் வீ.எஸ்.ராஜம்,  2011 – ஆம் ஆண்டுக்கான விருதுக்குப் பேராசிரியர் பொன். கோதண்டராமன், 2012 – ஆம் ஆண்டுக்கான விருதுக்குப் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி, 2013- ஆம் ஆண்டுக்கான விருதுக்குப் பேராசிரியர் மருதநாயகம், 2014- ஆம் ஆண்டுக்கான விருதுக்குப் பேராசிரியர் கு. மோகனராசு, 2015 – ஆம் ஆண்டுக்கான விருதுக்குப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார், 2016- ஆம் ஆண்டுக்கான விருதுக்குப் பேராசிரியர் கா. ராஜன், 2017- ஆம் ஆண்டுக்கான விருதுக்குப்  பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், 2018- ஆம் ஆண்டுக்கான விருதுக்குக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கான விருதுக்குப் பேராசிரியர் கு. சிவமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article