டில்லி:

தார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைக்க மக்கள் விரும்புகின்றனர் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

நாட்டின் அரசு துறையின் சேவைகளை பெற ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

அதன்படி வங்கி கணக்கு தொடங்க, வரி செலுத்த,  பாஸ்போர்ட் பெற, மொபைல் எண் வாங்க, நீட் போன்ற பொதுத்தேர்வு எழுத, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கும் ஆதார் அட்டை, திருப்பதி தரிசனம், பாலிசி, கேஸ்,  போன்ற  அனைத் துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று  மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வாக்காளர் அட்டையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில், இது தொடர்பான ஆய்வு விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில்  வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க மக்கள் விரும்புவதாக தெரிவித்து உள்ளது. அரசு அதை விரும்பாத நிலையிலும் மக்கள் அதை விரும்புவதாக தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து ஆன்லைன் மூலம் எடுத்த கணக்கெடுப்பின்படி, 80 சதவிகிதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். போலி வாக்காளர்களை அகற்றுவதற்கு இது உதவுவதாக அவர்கள் கூறி உள்ளனர்.

மேலும், இந்த கருத்துக்கணிப்பில், வெறும் 8 சதவீதத்தினர் மட்டுமே இந்த நடவடிக்கையை ஆதரிக்கவில்லை என்றும், மீதமுள்ள 12 சதவீதத்தினர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறி உள்ளனர்.

இதுகுறித்த கணக்கெடுப்பில், 15,134 பேர் பங்குகொண்டு தங்களது கருத்தை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல வாக்கெடுப்பில் மோசடி நடைபெறுவது குறித்த கேள்விக்கு,  28 சதவிகிதம் “ஆம்” என்று கூறப்பட்டாலும், 35 சதவீதத்தி னர் அதைப் பற்றி உறுதியாக நம்பவில்லை என்று கூறி உள்ளனர். மேலும், 37 சதவீதத்தினர் மோசடியான வாக்களிப்பு நடக்கவில்லை என்று கூறியுள்ளனர். இது சம்பந்தமாக 6,800 பேர் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகறது.

போலி வாக்குகளை தவிர்க்கும் வகையில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டையை அட்டையை இணைக்க வேண்டும் என்று பெரும்பாலான பொதுமக்கள் விரும்புவது இந்த சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.