சென்னை: 

ரசு அலுவலகங்களில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட  வழக்குகளை சென்னை  உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரி திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில்,  சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை மத்தியஅரசு உறுதி செய்துள்ளது. அவர் குற்றவாளி என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் காரணமாக குற்றவாளியின் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கக்கூடாது, உடனே அதை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

மேலும் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உள்பட 5 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை  நீதிபதி ரமேஷ் ,நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

இந்த வழக்கின்  இன்றைய விசாரணைக்கு மனுதாரர்கள் 5 பேர் தரப்பில் இருந்து எந்தவொரு  வழக்கறிஞர்களும்  ஆஜராகாததால், வழக்கை தள்ளுபடி செய்து  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுபோல, சென்னை மெரினாவில் மறைந்த ஜெயலலிதாவுக்கு  நினைவிடம் கட்டுவது தொடர்பான வழக்கும் தள்ளுபடி செய்தாக கூறி உள்ளது.

இந்த வழக்கில்  மனுதாரர்கள் தரப்பில் யாரும் ஆஜராகாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது.