சென்னை: நாடு முழுவதும் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உயர்ப்படிப்புகளுகான நுழைவு தேர்வு குறித்து மத்தியஅரசு இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில், நீட் தேர்வு, மருத்துவ படிப்பு ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழகஅரசு  இன்று ஆலோசனை நடத்துகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில், மருத்துவபடிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் தங்களது மாணவர்களுக்கு ஒதுக்கீடு வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதையடுத்து, அரசு உதவிப்பெறும்  மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 2.5% உள் ஒதுக்கீடு செய்யலாமா என்பது குறித்து தமிழகஅரசு யோசித்து வருகிறது.

இதற்கான முதல்  ஆய்வுகுழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் மற்றும் முக்கிய உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.  இந்த ஆலோசனை கூட்டம், மாலை 4:30 மணிக்கு தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ளது.  இந்த ஆய்வு குழு கூட்டத்திற்கு பிறகு நீட் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.