சென்னை: தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதிய கால அவகாசம் தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

3 நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட தொகுதியில் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி அறிவிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் இந்த வழக்கை தொடர்ந்தது.

வழக்கு விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதிய கால அவகாசம் தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு உள்ளது.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஜனநாயகம் வழங்கிய முக்கிய அடிப்படை உரிமையான வாக்குரிமையை மறுக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது.

முன்னதாக சொந்த தொகுதிக்கு வெளியே தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு மின்னணு மூலம் வாக்களிக்க அனுமதி தர இயலாது என்றும்,  தபால் வாக்கு மூலம் மட்டுமே வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.