சென்னை:
ரசு கல்லூரிகளில் தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சுமாா் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடத்தப்பட்டது. அதன்படி, நிகழாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி ஜூலை 27ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில், அரசு கல்லூரி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்றும், இந்த பட்டியல் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாணவர் சேர்கை நடத்தப்பட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.