சென்னை:
க்ரைனில் படித்த மானவர்கள் கல்வியை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், போர் தொடர்பான வீண் குழப்பம், கவலை, எதிர்காலம் மீதான அச்சம் ஆகியவற்றை நிவர்த்தி செய்ய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இறுதியாண்டு படிப்பில் சில மாதங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் மாணவர்களுக்கு, முந்தைய சான்றிதழைக் கொண்டு நீட் எஃப்எம்ஜி தேர்வு எழுதவும், இந்தியாவில் மருத்துவராக பிராக்டிஸ் செய்யவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். போலாந்து, ருமேனியா, ஹங்கேரி, ஜார்ஜியா, அர்மேனியா போன்ற உக்ரைனில் வழங்கப்பட்ட மருத்துவக் கல்வியை ஒத்த பாடத்திட்டம் உள்ள நாடுகளில் எஞ்சிய படிப்பைத் தொடர பேச்சுவார்த்தை மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பான்மையான மானவ்ர்க்குள் வங்கிக் கடன் பெற்றிருப்பதால், வட்டி தொகையை செலுத்த கால அவகாசம், தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டது.