டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் உள்நாட்டு ஜனநாயகத்திற்கு நல்லது, தொண்டர்கள் விரும்பினால் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயார் என  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட் சூசகமாக தெரிவித்துள்ளார்.  நவராத்திரி பண்டிகை தொடங்கியபின் கெலாட் வேட்புமனுத் தாக்கல் செய்வார் என தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையில் தலைவர் பதவிக்கான கோதாவில் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஷ்னிக் போன்றோரும் உள்ளதாக உறுதிசெய்யப்படாத  தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல்காந்தி போட்டியிட மறுத்து வரும் நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும், கேரள காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சசிதரூர் களத்தில் குதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தனது மாநில கட்சி தலைவர்கள், மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய அசோக் கெலாட்,  கட்சி தொண்டர்கள் விரும்பினால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய தயார் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24 முதல் 30-ம் தேதி வரை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

இதையடுத்து,  தலைவர் பதவிக்கான கோதாவில் குதிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில், ராகுல் தனது நடைபயணத்தில் இருந்து டெல்லி செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ராகுல் தலைவர் பதவிக்கான போட்டியில் குதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராகுல் போட்டியிடுவதை பொறுத்தே, தேர்தலில் போட்டி ஏற்படுமா என்பது தெரிய வரும் என டெல்லி ஊடகவியலாளர்கள் விவாதித்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் தலைவர் தேர்தல் தொடர்பாக  காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்த, மூத்த அதிருப்தி தலைவர்களை கொண்ட  ஜி23  தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள தலைவர்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அதிருப்தி தலைவர்களில் ஒருவரான சசிதரர்,  தலைவருக்கான தேர்தலில் தான் போட்டியிட விரும்பு வதாக ஏற்கனவே சூசகமாக தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், அசோக் கெலாட்டும் தலைவர் பதவிக்கான கோதாவில் குதித்த தயாராகி வருகிறார். நேற்று டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் அசோக் கெலாட் சந்தித்து பேசிய கெலாட், தலைவர் தேர்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. கட்சி தலைமையின் ஆசி கெலாட்டுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்த்தபோது, தலைவர் பதவி தொடர்பான கேள்விகு பதில் அளித்தவர், காங்கிரஸ் கட்சியும், கட்சி மேலிடமும் எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. நான் 40 முதல் 50 ஆண்டுகளாக பதவியில் உள்ளேன். என்னை பொறுத்தவரை எனக்கு பதவி முக்கியமல்ல. எனக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளை நான் செய்து முடிப்பேன்.   தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தொண்டர்கள் கேட்டுக்கொண்டால் நான் அதை நிராகரிக்க முடியாது. கட்சி தொண்டர்கள் விரும்பினால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய தயார் என்றார். தசராப் பண்டிகை தொடங்கியபின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வேட்புமனுத் தாக்கல் செய்வார் என தகவல்கள் பரவி வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இருவரும் போட்டியிடுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக் கின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும்பாலான தொண்டர்கள், ராகுல் காந்திதான் தலைவராக வர வேண்டும் என்று மண்டலவாரியாக தீர்மானம் நிறைவேற்றி வருகிறது.

இதற்கிடையில் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து பேசிய சசிதரூர்,  “ தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தும். தேர்தலில் போட்டியிடுவது உங்கள் விருப்பம்” என சோனியா காந்தி தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.

இதனால், கட்சி தலைவருக்கான போட்டியில் அசோக் கெலாட்டும், சசிதரூரும் இறங்குவார்கள் என அக்பர் சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தலைவருக்கான போட்டியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களான, முகுல் வாஸ்னிக், மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயும் உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்கூறுகையில் “ காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், வரவேற்கப்படுகிறார்கள். இது ஜனநாயக அடிப்படையிலான தேர்தல், யாரும் போட்டியிட மற்றவர்களிடம் அனுமதி பெறத் தேவையில்லை.”எனத் தெரிவித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் 24ந்தேதி தொடங்குகிறது… முழு விவரம்…