சனி கிரகத்தால் உண்டாகும் நன்மை – தீமை

Must read

சனி கிரகத்தால் உண்டாகும் நன்மை – தீமை

நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் சனி கிரகத்தின் பார்வை தான் ஒருவருடைய பாவ – புண்ணியங்களின்படி நமக்கு நன்மைகளையும், தீமைகளையும் வழங்குகிறது.  நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சனி கிரகம் இருக்கிறது. இதன் பார்வை தான் ஒருவருடைய பாவ – புண்ணியங்களின்படி நமக்கு நன்மைகளையும், தீமைகளையும் வழங்குகிறது.

சனியின் ஆதிக்கம் கொண்டவர்கள், நீதி நேர்மையுடனும், நன்னடத்தையோடும் வாழ விரும்புவார்கள்.   ஆனால் இவர்களது சத்தியத்திற்கு அவ்வப்போது சோதனை வந்து போகும். இந்த நபர்கள் தயாள குணம், தர்ம சிந்தனையைக் கடைப்பிடிப்பார்கள். இவர்களுக்குத் தலைமைப் பதவி தேடி வரலாம். 

ஏழரைச் சனி அல்லது அஷ்டமச் சனி முடியும் தறுவாயில் ஒரு வருக்கு சனி கொடுக்கும் வாழ்வானது, நிரந்தர யோகமாக அமையும்.   ஏழு தலைமுறைகளுக்காகச் சொத்துகளைச் சேர்க்கும் யோகத்தைத் தருவது சனி பகவான் தான்.  அந்த சொத்துகளைக் கட்டிக்காக்கும் சக்தியும், சனியிடம் இருந்தே கிடைக்கிறது.

தொழில் அதிபர் என்கிற தகுதியைத் தருபவரும் இவர்தான். எண்ணெய் நிறுவனம், இரும்பு கம்பெனி, பெட்ரோல், டீசல் பங்க் அதிபதிகள், சனி ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.   வம்சாவழியாக வரும் நோய்களைத் தீர்க்கும் சக்தி படைத்தவர் சனி பகவான்.

மன வைராக்கியத்தை அருள்பவர், பிறரது மரணம் அடையும் கால நேரம் அறியும் சக்தி, மரணத்திற்குப் பின் நடக்கும் சம்பவங்களை உணரும் சக்திகளைத் தருபவரும் சனி பகவானே.

வழக்குரைஞர் தொழில், நீதிபதி பதவி, ரயில்வே துறையில் பெரிய பதவிகள், காலணி கடை, கசாப்பு கடை, எருமை பண்ணை, மர விறகு கடை போன்றவற்றால் லாபத்தை அருள்பவர் சனீஸ்வரன்.

தவிரப் பிண அறையில் காவலாளி வேலை, பிணத்தை அறுத்து ஆய்வு செய்யும் (போஸ்மார்ட்டம்) பணி, சுடுகாடுகளில் பிணம் எரிப்பது, புதைப்பது, அவசர உதவி ஆம்புலன்ஸ் வண்டியில் வேலை போன்றவற்றுக்குச் சனி பகவானின் ஆதிக்கமே காரணமாக அமைகிறது.

More articles

Latest article