சென்னை:

‘மோடியே திரும்பிப் போ’ என்ற  ஹாஷ்டேக்  இன்று உலக அளவில் டிரெண்டாகி உள்ளது. இது மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாரத பிரமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை அருகே நடைபெறும் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில், உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து, மத்திய அரசு  தட்டிக்கழித்து வருகிறது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று சென்னை வந்துள்ள மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம், மற்றும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ராணுவ கண்காட்சியில் பங்கேற்க தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை #GoBackModi ஹாஷ்டேக் மூலம்  மோடியே  திரும்பிப்போ என்று பதிவுகளை இட்டு வருகின்றனர்..

தற்போது இந்த ஹாஷ்டேக் உலக அளவில் டிரெண்டாகியுள்ளது. இது மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.