சென்னை

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென் இந்திய நிதி அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துக் கொள்ளவில்லை

சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.   அப்போது தமிழக முதல்வர், ”நாங்கள் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.    மாநில அரசு அதன் உரிமையைப் பெற சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்றார்.  துணை முதல்வரும் நிதி அமைச்சருமான பன்னீர்செல்வமும் அதை ஆமோதித்தார்.   ஆனால் மாநில அரசின் முக்கியமான உரிமையான 15 ஆவது நிதிநிலை ஆணையம் அமைப்பது குறித்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளாமல் இருந்து விட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தென் இந்திய நிதி அமைச்சர்கள் மாநாட்டை கேரள அரசின் சார்பில் அம்மாநில நிதி அமைச்சர் ஐசக் அமைத்திருந்தார்.   அதில் சித்தராமையா, சந்திரபாபு நாயுடு,  பினராயி விஜயன் ஆகியோர் கலந்தின் கொண்டனர்.   தமிழக எதிர்க்கட்சி தலைவரான மு க ஸ்டாலின், “15 ஆவது நிதிநிலை ஆணையத்தின் முக்கிய விளக்கங்களில் மாநில அரசின் வரி வருவாயை அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக பிரித்து அளிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.  இதனால் பல மாநிலங்களில் நகராட்சி நிர்வாகம் நிதி இன்றி பாதிக்கப்படும்”  என தெரிவித்தார்.

இதற்கு சித்தராமையாவும் சந்திரபாபு நாயுடுவும் ஆதரவு அளித்தனர்.   இவ்வாறு நடைமுறைப் படுத்தப்பட்டால் அது மாநிலங்களின் உரிமையை பெரிதளவு பாதிக்கும் எனவும் அதை இந்த மாநாட்டில் கூடி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.  ஆனால் இந்த மாநாட்டில் தமிழக நிதி அமைச்சர் ஒ பன்னீர்செல்வம் கலந்துக் கொள்ளாதது பலருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கி உள்ளது.

இந்த 15 ஆவது நிதி நிலை ஆணைய விளக்கத்தின் படி பல வட இந்திய மாநிலங்கள் தங்கள் வரி வருவாயில் முழுப் பங்கையும் பெற வாய்ப்புள்ளது.   ஆனால் அதிகமாக வரி வருவாய் ஈட்டும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு குறைந்த அளவு பணமே கிடைக்கும் வாய்ப்புள்ளது.  அதாவது தென் இந்திய மாநிலங்களில் மத்திய அரசுக்கு அளிக்கப்படும் வரி வருவாய் ரூ.3.25 லிருந்து வெறும் 52 பைசாக்களே கிடைக்கும்.   ஆனால் வட இந்திய மாநிலங்களான, பீகார், மத்திய பிரதேஷ் மற்றும் உத்திரப் பிரதேச மாவட்டங்களுக்கு அங்கிருந்து கிடைத்த வரி வருவாயைப் போல 144% அதிகம் கிடைக்கும்

இந்த மாநாட்டில் தமிழகமும் பங்கு பெற்று தனது கருத்தை தெரிவித்திருந்தால் இது  மத்திய அரசின் ஆணைய விளக்கத்துக்கு எதிராக அமைந்திருக்கும்.   ஆனால் மற்ற மாநிலங்கள் மட்டுமே இதை எதிர்ப்பது போலவும் தமிழக அரசு தனது எதிர்ப்பை காட்டவில்லை என்பது போலவும் தற்போது கூறப்படுகிறது.    இதனால் தமிழக அரசு தனது வருவாய் இழப்பை மறைமுகமாக ஏற்றுக் கொண்டது போல் ஆகிவிட்டது.

இது குறித்து பொருளாதார ஆர்வலர் பலரும் தமிழக அரசையும் அதன் போக்கையும் கண்டித்துள்ளனர்.