ஐஎஸ்எல் கால்பந்து: கோவாவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி

Must read

foot1ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 47-ஆவது லீக் ஆட்டம், ஃபட்ரோடாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி. அணியைத் தோற்கடித்தது. இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி 18 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. ஆனால், இப்போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கோவா தோல்வியை தழுவியதால், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது.

கொல்கத்தா சார்பாக 28-ஆவது நிமிடத்தில் ஜுவான் பெலன்காúஸா, இறுதி பத்து நிடங்களில் பியர்சன் கோல் அடித்தனர். கோவா சார்பாக 80-ஆவது நிமிடத்தில் மந்தர் தேசாய் கோலடித்தார்.

More articles

Latest article