dufஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நேற்று தென் ஆப்ரிக்கா – ஆஸ்திரேலியா இடையான மூன்றாவது டெஸ்ட்போட்டி துவங்கியது. தென் ஆப்பிரிக்க அணி, முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், டாஸ் வென்று பேட்டிங்யை தேர்வு செய்தது.

தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர், ஆம்லா, டுமினி ஆகியோர் 5 சொல்லிவைத்தார் போல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் 44 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த தென் ஆப்பிரிக்க அணி திணறியது. அதன்பின் 4-ஆவது விக்கெட்டுக்கு ஸ்டீபன் குக் – கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் இணைந்து 51 ரன்கள் சேர்த்தனர். ஸ்டீபன் குக் 40 ரன்கள் அவுட் ஆனார். அடுத்து வந்த டெம்பா பெளமா 8 ரன்களில் அவுட்.

விக்கெட் ஒருபுறம் விழுந்தாலும், டூபிளெஸ்ஸிஸ் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தார். தென் ஆப்பிரிக்கா 149 ரன்களை எட்டியபோது டி காக் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிலாண்டர் 4 ரன்களிலேயே அவுட் ஆனார். மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 147 பந்துகளில் சதம் அடித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த 2-ஆவது தென் ஆப்பிரிக்க கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டியில் இதுவரை 6 சதங்கள் அடித்துள்ளார்.

இறுதியாக தென் ஆப்பிரிக்கா 76 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 12 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்தது. கவாஜா 3 ரன்களுடனும், ரென்ஷா 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.