பனாஜி:

கோவா முதலமைச்சர் லட்சுமிகாந்த் (பாஜக) மந்தரம் தொகுதியில் தோல்வி அடைந்தார். கோவாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

கோவாவில் நடைபெற்ற 40 தொகுதிகளில், காங்கிரஸ் 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும் பாஜக 4 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலையில் இருந்து வருகிறது.

பாஜக முதல்வர் லட்சுமிகாந்த் மந்தரம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தோல்வியை தழுவும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் உறுப்பினர் முன்னிலையில் உள்ளார்.

ஆனால் துணைமுதல்வர் டிசௌசா  மபுசா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.