லக்னோ:

உ.பி.யில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பாரதியஜனதா கைப்பற்றி வருகிறது. இதன் காரணமாக  15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்  ஆட்சியை பிடிக்கிறது.

இதையடுத்து மத்திய அமைச்சர்கள் சிலர் மோடியை வானளாவ புகழ்ந்து வருகிறார்கள். மோடி இந்தியாவுக்கு கிடைத்தது கடவுள் கொடுத்த பரிசு என்றும் கூறி உள்ளனர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட  இடங்களில்  முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் உ.பி.யில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது.  முதல்வர் பதவியை பிடிக்க அங்கு கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த 2002-ம் ஆண்டு ராஜ்நாத் சிங் உ.பி. முதல்வராக பதவி வகித்தார். அதன்பிறகு அங்கு பாஜக வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. தோடர்ந்து, பகுஜன் சமாஜ், மற்றும் சமாஜ்வாதி கட்சி மாறி மாறி உ ஆட்சி அமைத்தன.

இந்நிலையில் தற்போது பெரும்பான்மை பெற்று பா.ஜ.க மீண்டும் ஆட்சி கட்டிலில் ஏறுகிறது.

உ.பி. வெற்றி குறித்து மத்திய அமைச்சர்கள் பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் வெற்றி ஏழை, தலித் மக்களுக்கான வெற்றி என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த பரிசு பிரதமர் நரேந்திர மோடி என சிவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்களுக்கு உ.பி. தவிர பஞ்சாப் போன்ற மற்ற மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் குறித்து தெரியாதோ என்று என்ன தோன்றுகிறது….