மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. உ.பியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது. கோவாவில் காங்கிரஸ் அரியணை ஏறுகிறது. இப்படி பலவித மாற்றங்கள். ஆனால், நெட்டிசன்களை அதிகம் பாதித்த தேர்தல் முடிவு மணிப்பூர் சமூக ஆர்வலர் ஜரோம் சர்மிளாவின் தோல்விதான்.

மணிப்பூரில் மத்திய அரசு அமல்படுத்திய ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2000-ம் ஆண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

தனது 27-வது வயதில்  இந்த போராட்டத்தை தொடங்கினார்.16 ஆண்டுகள் பட்டினி கிடந்து  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். எனினும் அவருக்கு கடைசி வரை வெற்றி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் குதித்தார்.

மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் இவரது புதிய கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட்டது.

மணிப்பூர் மாநில முதலமைச்சர்  இபோபி சிங்கை எதிர்த்து தவுபால் தொகுதியிலும், மேலும் குராய் தொகுதியிலுமாக இரு தொகுதிகளில் அவர்  போட்டியிட்டார். இதில் தவுபால் தொகுதியில் ஐரோம் சர்மிளா முதல்வர் இபோபி சிங்கிடம்  தோல்வி அடைந்தார்.. வெறும் 90 வாக்குகளையே பெற்றிருக்கிறார்.
இது குறித்து ஷர்மிளா, “நான் தோல்வியை பற்றி கவலைப்படவில்லை.   மக்கள் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்குவார்கள் என எண்ணினேன். எல்லோரும் தங்களது படைபலம் மற்றும் பணபலத்தை வெளிப்படையாக காட்டினார்கள். நாங்கள் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் முயற்சி செய்வோம்”  என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இவரது தோல்வி நெட்டிசன்களை மிகவும் பாதித்துவிட்டது.  ஆளாளுக்கு ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றில் சில இங்கே..

வல்லம் பசீர்

அரசியல் ஒரு சாக்கடை ப்ரோ , ரவுடியும் , தாதாவும் தான் ப்ரோ அரசியலில் இருப்பாங்க .

இப்படி பேசிக்கொண்டே தன் உயிரையே போராட்ட களத்தில் ஆயுதமாக்கி போராடிய இரோம் ஷர்மிளாவுக்கு மக்கள் அளித்த வாக்குகள் 54 தான் .

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்
போகட்டும்  :

Packiarajan Sethuramalingam

ஐரோம் சர்மிளா தோல்வி ஒன்றை தெளிவுபடுத்துகிறது..

நாம் செய்யும் Moderate அரசியல் சரியே…

திருச்சி பெரியார் சரவணன்

ஐரோம் சர்மிளா…  இது முட்டாள்களின் தேசம் -நீ போராட்டக் களத்திலேயே செத்துப் போயிருந்தாள் உன் மரணம் மரியாதைக்கு உரியதாய் இருத்திருக்கும்,,,,,,,, அயோக்கியர்கள் ஒரு போராட்டத்தையே சாகடித்து விட்டார்கள்

Prabhakaran Balakrishnan ·

எந்த மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்தாரே அதே மக்களால் தோற்கடிக்கப்பட்டுவிட்டார் ஐரோம் சர்மிளா

அருள் குமார்

இம்புட்டு நல்வர்கள் தான் உள்ளார்கள்

நோட்டோவைவிட குறைவான வாக்குகள் பெற்று ஐரோம் சர்மிளா தோல்வி

கார்த்திக் கரூர்

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போவார்கள்.

Prem Joe

போராளிகளை மக்கள் மதிக்க மாட்டார்கள்.

ரத்ன. செந்தில் குமார்

வாழ்க சனநாயகம்…

Mahendran Parasuraman

நாம தான் கேவலமானவனுங்கன்னு நெனச்சேன் மணிப்பூர்காரனுங்க நம்மல மென்னு தின்றுவானுங்க போல.

ஹாமாரா டேஷ் மே பூரா மானெங்கெட்ட பயகே தான்.