நேற்று கோவை வந்த பிரபல பாடகர் யேசுதாஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். பத்மவிபூஷன் விருது பெற்ற அவருக்கு வாழ்த்து தெரிவித்த செய்தியாளர்கள், இந்த விருது குறித்து சர்ச்சைகள் எழுதவது பற்றி கேட்டனர். உடனே டென்சன் ஆன யேசுதாஸ் “விருது குறித்து புகார் தெரிவிப்பவர்களிடமும் விருது வழங்குபவர்களிடமும் கேளுங்கள்” என்றார்.

இசையமைத்த திரைப்பாடல்களை தனது அனுமதி இன்றி பாடக்கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் விட்டது குறித்த கேள்விக்கு “வக்கீல் நோட்டிஸ் அனுப்பியவர்களிடம் போய் கேளுங்கள்” என்றார்.

பொதுவாக அமைதியான சுபாவமுள்ள யேசுதாஸ் ஏன் இப்படி ஆத்திரப்பட்டார் என்று புரியாமல் செய்தியாளர்கள் திரும்பினர்.