சென்னை: சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு  நடைபெற்று வரும் நிலையில், இன்று 2ம் நாள் அமர்வு தொடங்கியது.  இன்றைய முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஓசூரில் டைட்டன் நிறுவனம் ரூ. 430 கோடி முதலீடு  உள்பட  300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதற்காக, உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் சுற்றுப்ப யணம் செய்து புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், 2024ம் ஆண்டின் உலக முதலீட்டாளர் 2 நாள் மாநாடு,  சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில்  ஜனவரி7ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டிடை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை மந்திரி பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.  நேற்றைய  மாநாட்டின்போது, பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 2030-க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வந்தது. அதன்படி,  மாநாட்டின்  முதல் நாளான நேற்று மட்டுமே, ரூ.5.5 லட்சம் கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை எட்டியுள்ளதாக தொழிற்துறை உயரதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று 2வது நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.  இன்றைய முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஓசூரில் டைட்டன் நிறுவனம் ரூ. 430 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம்  உள்பட 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுதாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: முதல் நாளிலேயே இலக்கை எட்டிய தமிழ்நாடு – முதலீடு செய்யும் நிறுவனங்கள் – எவ்வளவு முதலீடு? விவரம்