மந்திரவாதி பிடியில் நடிகை பாபிலோனா.? கதரும் பாட்டி

Must read

நடிகை பாபிலோனா
நடிகை பாபிலோனா

வர்ச்சி நடிகை பாபிலோனாவை ஒரு மந்திரவாதி தன் வசப்படுத்தி வைத்துள்ளதாக அவரின் பாட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று பாபிலோனாவின் பாட்டி கிருஷ்ணகுமாரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியதாவது :-
பாபிலோனாவை சிறு வயதிலிருந்தே நான் தான் வளர்த்தேன். என் போத்தியை நான் தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தேன், ஆனால் தற்போது அவள் சுந்தர் பாபுல்ராஜ் என்ற மந்திரவாதி என் பேத்தியை வசியப்படுத்தி, மந்திரவாதி தனது பிடியில் வைத்துள்ளார்.
எனது பேத்தியின் நகைகள் மற்றும் பணம் அனைத்தையும் அவர் அபகரித்துவிட்டார். அந்த மந்திரவாதி திருமணமானவர். அவரால் எனது பேத்தியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதுப்பற்றி நான் நேரிடையாக சென்று மந்திரவாதியிடம் பேசினேன். எனது பேத்தியை விட்டுவிடுமாறு கெஞ்சினேன். ஆனால் அந்த மந்திரவாதி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து தவறாகப் பேசினார்.
மந்திரவாதி பல்வேறு குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிகிறது. எனவே எனது பேத்தி பாபிலோனாவை மந்திரவாதியிடம் இருந்து பத்திரமாக மீட்டுத் தரவேண்டும்’’ என்று மனுவில் கூறியுள்ளார் பாபிலோனாவின் பாட்டி கிருஷ்ணகுமாரி.
ம்ம்ம்ம்ம்…. என்ன மந்திரமா இருக்கும்….?

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article