கூட்டணி என்றால் ‘கொடுக்கல் – வாங்கல்’ இருக்கத்தான் செய்யும்: சித்தராமைய்யா

Must read

காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவராக இருக்கும் சித்தராமைய்யா, அக்கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராகவும் இருக்கிறார்.

அவர் மேலும் கூறியதாவது, “வரும் மார்ச் 16ம் தேதி, காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிடும். கூட்டணி என்றாலே, கொடுக்கல் – வாங்கல் இருக்கத்தான் செய்யும்.

நாங்கள் கடந்த தேர்தலில் வென்ற தும்கூர் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு விட்டுக் கொடுத்ததால், கட்சிக்குள் அதிருப்தி உருவாகியிருந்தாலும், நாளாவட்டத்தில் அது சரியாகிவிடும்.

இந்தத் தொகுதியை விட்டுக்கொடுப்பதென்பது, கட்சியினுடைய அகில இந்திய தலைமையின் முடிவு. எனவே, ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்” என்றார்.

கர்நாடகாவின் 28 மக்களவைத் தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளிலும், தேவகெளடாவின் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

– மதுரை மாயாண்டி

More articles

Latest article