சாம்ராஜ்நகர்
ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டதால் சாம்ராஜ்நகரில் இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்த கல்வி நிலையங்களுக்கு வரக்கூடாது என அரசு தடை விதித்தது.   இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு ஹிஜாப் தடை உத்தரவு செல்லும் எனத் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.  இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புக்கள் ஹிஜாப் தடையை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வருகின்றன.   அவர்கள் வேலை நிறுத்தம், கடை அடைப்பு உள்ளிட்ட போராட்டங்களைக் கையில் எடுத்துள்ளனர்.
நேற்று சாம்ராஜ்நகரில் தி நகரில் உள்ள ஒரு கல்லூரியில் தேர்வு எழுத வந்த சில இஸ்லாமிய மாணவிகள் ஜிஹாப் அணிந்து வந்தனர்.   அந்த மாணவிகளைக் கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தியது.   இதை எதிர்த்து அந்த இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுத முடியாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.