மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் புல்காதர் மாவட்டம் நாலசோபராவில் கடந்த 3-ம் தேதி காலையில் விளையாடிக் கொண்டு இருந்த 12 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்,

அவரிடம் இருந்து தப்பிக்க சிறுமி 4 வது மாடியில் இருந்து குதித்தார். இதை கண்டு கீழே நின்ற சிலர் சிறுமியை தார்ப்பாய் உதவியுடன் பிடித்துள்ளனர். இருப்பினும் சிறுமிக்கு எழும்பு முறிந்தது.

உடனடியாக சிறுமி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.