தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிப்ரான். தன் இசைக்காக ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ‘ஜிப்ரானின் ஆன்மீகப் பயணம்’ எனும் பெயரில் பக்திப் பாடல்கள் கொண்ட ஆல்பம் ஒன்றை ஜிப்ரான் உருவாக்கியுள்ளார்.

இந்த ஆல்பத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆல்பம் வரும் ஜூன் 12ஆம் தேதியன்று வெளியாகிறது.

இந்த நவீன இசை யுகத்தில் இந்த ஆல்பம் தரமாகவும், தெய்வீகத்தன்மையுடனும், இருக்கவேண்டும் என்று விரும்பினேன். அதே சமயத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்களால் எழுதப்பட்ட பாடல்களின் நுணுக்கங்களையும், கலாச்சாரத்தை இதில் கொண்டு வர விரும்பினேன் என ஜிப்ரான் கூறியுள்ளார் .