ஜெர்மனியில் 1000 பேருக்கு மேலான மக்களின் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஆஸ்விட்ச் காவலாளி ஒருவர் விசாரணை நடக்கும் சில நாட்கள் முன் உயிரிழந்தார், என நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
auschwits-birkenau
எர்ன்ஸ்ட் ட்ரெம்மெல் என்பவர் நவம்பர் 1942 ல் இருந்து ஜூன் 1943 வரை ஆக்கிரமிக்கப் பட்டிருந்த போலந்தில் மரண முகாமில் நாஜி SS பாதுகாவலர்களின் குழு உறுப்பினராக இருந்தார். அவர் மீதான விசாரணை ஏப்ரல் 13 ம் தேதி தொடங்க இருந்தது.
போலீசார் காவலாளியின் (93 வயது ) மரணத்தை உறுதி செய்த பின்னர் அனைத்து விசாரணைத் தேதிகளும் ரத்து செய்யப்பட்டது என பிராங்பேர்ட் அருகே ஹனாயின் மேற்கு நகரில் உள்ள ஒரு நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ட்ரெம்மெல்லின் மரணத்திற்கான காரணம் அறியப்படவில்லை.
ஆறு மில்லியனுக்கும் மேலான மக்கள், பெரும்பாலும் யூதர்கள், நாஜிக்களால் கொல்லப்பட்ட ஹோலோகாஸ்டுடன் சம்பந்தம் இருக்க வாய்ப்புள்ள சில விசாரணைகளை ஜெர்மனி நிலுவையில் வைத்துள்ளது.
நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த போலந்தில் இருக்கும் ஆஸ்விட்ச் மரண முகாமில் நடந்த ஆயிரக்கணக்கான மக்களின் கொலையில் இன்னும் 90 களில் உள்ள இரண்டு ஆண்களுக்கும் ஒரு பெண்ணிற்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஆஸ்விட்ச் துணை செவிலியராக இருந்த 95 வயதான ஹூபர் ஜேக் மற்றும் மரண முகாமில் முன்னாள் பாதுகாப்பாளராக இருந்த 94 வயதான ரீன்ஹோல்ட் ஹான்னிங் என்பவர்கள் மீதான விசாரணை, ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.
மூன்றாவது பிரதிவாதியான ஆஸ்விட்ச்சில் ரேடியோ ஆபரேட்டராக  பணிபுரிந்த 92 வயதான ஹெல்மா எம்  என்பவருக்கு இன்னும் விசாரணைக்கான தேதி முடிவு செய்யப்படவில்லை. இவர் 260,000 மக்களின் கொலைக்கு துணையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.