பெர்லின்

று முறை டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற போரிஸ் பெக்கருக்கு ஜெர்மன் டென்னிஸ் மையம் டென்னிஸ் தலைவர் என்னும் பட்டத்தை வழங்க உள்ளது

போரிஸ் பெக்கர் ஆறு முறை டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர்.  1985ல் அவர் விம்பிள்டன் போட்டியில் வென்ற போது அவருடைய வயது 17 என்பதால் முதல் இளம் சாம்பியன் என புகழப்பட்டவர்.   சென்ற ஜூன் மாதம் இவரை நீதிமன்றம் திவால் ஆனவர் என அறிவித்திருந்தது.   அதன் பின் அவருக்கு ஜெர்மன் டென்னிஸ் மையம் டேவிஸ் கப் போட்டிகளுக்கான பயிற்சியாளராக அறிவித்தது.

தற்போது ஜெர்மன் டென்னிஸ் மையம் அவருக்கு டென்னிஸ் தலைவர் என்னும் பட்டத்தை அளித்து கவுரவிக்க உள்ளது.  இது குறித்து நேற்று மையம் தகவல் வெளியிட்டது.  நாளை கூட இருக்கும் மையக் கூட்டத்தில் இந்த தகவல் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிய வருகிறது.

பெண்கள் பிரிவில் பார்பரா ரிட்டனர் டென்னிஸ் தலைவராக அறிவிக்கப்படுவார் என தெரிய வருகிறது.  அது மட்டுமின்றி மேலும் பல ஆச்சரிய அறிவுப்புக்கள் வெளியாகும் என மையத்தின் தலைவர் டிர்க் ஹோர்ட்ராஃப் தெரிவித்துள்ளார்.