சென்னை

ந்த மாதம் 11 ஆம் தேதி வெளியான நடிகையர் திலகம் .திரைப்படத்தில் ஜெமினி கனேசனை தவறாக சித்தரித்துள்ளதாக அவர் மகள் கமலா செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகை சாவித்திரியின் கதையை அடிப்படையாக கொண்டு நடிகையர் திலகம் என்னும் திரைப்படம் வெளிவந்துள்ளது.  இந்தத் திரைப்படம் ரசிகர்கள் வரவேற்பை பெற்ற போதும் ஒரு சில கண்டனங்களும் எழுந்துள்ளன.   தமிழ் ரசிகர்களில் பலர் சாவித்திரியின் வாழ்க்கையில் சம்மந்தப்பட்டுள்ள புகழ்பெற்ற நடிகர்களான எம் ஜி ஆர், சிவாஜி பற்றியோ தமிழ்ப் படங்கள் பற்றியோ குறிப்பிடவில்லை என கூறி வருகின்றனர்.

 

கமலா செல்வராஜ்

தற்போது சாவித்திரியின் கணவர் ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ் இது குறித்து, “இந்த திரைப்படத்தில் என் அப்பா ஜெமினி கணேசன் சாவித்திரியை மட்டுமே காதலித்ததாக கூறப்பட்டுள்ளது.  சாவித்திரி அம்மாவுடன் அவருக்கு திருமணம் ஆகும் போதே நானும் என் அக்காவும் பிறந்து விட்டோம்.   அதற்குப் பிறகும் என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் குழந்தைகள் பிறந்துள்ளன.  எனவே அவருக்கு என் அம்மாவுடம் காதல் இல்லை என்பது தவறு.

என் அப்பாதான் சாவித்திரிக்கு குடிக்க கற்றுக் கொடுத்தார் என திரைப்படத்தில் காட்டப் படுகிறது.   இதுவும் தவறான தகவல்.    சிவாஜியை கதாநாயகனாக வைத்து பிராப்தம் என்னும் படத்தை சாவித்திரி தயாரித்தார்.   அப்போதே அப்பாவுக்கும் அவருக்கும் தகராறு தான்.   அந்தப் படத்தை நிறுத்தி பண நஷ்டத்தை தவிர்க்க வேண்டும் என என் அப்பா அவரிடம் சொல்வதற்கு என்னையும் அழைத்துக் கொண்டு சாவித்திரி வீட்டுக்கு சென்றார்.

ஆனால் என்னையும் என் அப்பாவையும் வீட்டினுள் விடக் கூடாது என காவல்காரரை விட்டு சாவித்திரி துரத்தி அனுப்பினார்.   அப்படி இருக்க என் தந்தை சாவித்திரியின் வழ்க்கையை அழித்ததாக படத்தில் காட்டி இருப்பது கண்டனத்துக்குரியது.   மேலும் அவர் சாவித்திரியை ஏமாற்றி திருமணம் செய்துக் கொள்ளவில்லை.  அவர் மணந்த அத்தனை பெண்களும் அவர்களாகவே அவரை தேடி வந்தவர்கள்” என தெரிவித்துளார்.