புக்கர் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ

Must read

புதுடெல்லி:
லக்கியத்திற்காக வழங்கப்படும் உலகப் புகழ்பெற்ற விருதான புக்கர் விருதை முதல்முறையாக இந்திய எழுத்தாளரான கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளார்.

ஆங்கிலத்தில் எழுதப்படும் சிறந்த புதினத்திற்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. சுமார் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையுடன் கூடிய இந்த விருது கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய சிவப்பு சமாதி என்ற புதினத்திற்கு கிடைத்துள்ளது.

கீதாஞ்சலி இந்தியில் எழுதிய இந்த புதினம், டெய்சி ராக்வெல் என்பவரால் Tomb of Sand என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. 2022ம் ஆண்டுக்கான புக்கர் விருதுக்கு Tomb of Sand தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய பிரிவினையின்போது கணவரை பறிகொடுத்த வயதான பெண்மணி ஒருவரின் நிலை குறித்து இந்த புதினம் பேசுகிறது.

டெல்லியைச் சேர்ந்த இந்தி எழுத்தாளரான கீதாஞ்சலி ஸ்ரீ, ஏராளமான சிறுகதைகளையும் 5 புதினங்களையும் எழுதியுள்ளார்.

More articles

Latest article