சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர்.

இதையடுத்து அவர் தற்போது போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விஷால் :

பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னைக் குறுகச் செய்கிறது. அந்தப் பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைத்தது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் / பெற்றோர்களிடம் ஒருவரும், ஒருமுறை கூட மன்னிப்பு கோரவில்லை. இதுபோன்ற குற்றங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என் நண்பர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைக் கேட்டுக் கொள்கிறேன்.

இதை ஒரு சாதிப் பிரச்சினையாக மக்கள் மாற்றுவது வெட்கக்கேடானது. மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என்பது இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரியும்.

குறைந்தது இப்போதாவது மாணவர்களிடம் / பெற்றோரிடம் மன்னிப்பு கோருங்கள். இதைச் சாதிப் பிரச்சினையாக மாற்றாதீர்கள்.” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் காயத்ரி ரகுராம், “சினிமா துறையில் இருக்கும் நீங்கள் முதலில் அங்கு நடக்கும் துன்புறுத்தல்களை கண்டியுங்கள். புதிதாக இத்துறைக்குள் நுழையும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள் விஷால். பெண் முன்னணி நடிகைகள் மீதான துன்புறுத்தலைப் பாருங்கள். பயன்படுத்தி தூக்கி எறிய, நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரே இடத்திலிருந்து வருகிறீர்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

திரைப்பட தொழில்துறை பெண்களுக்கு உங்கள் உதவி தேவைப்படும்போது நீங்கள் உங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும். யதார்த்தத்தை சரி பார்க்கவும். உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையின் காரணமாக உண்மையில் பெண்கள் உங்களைப் பார்த்து ஓடுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகர் விஷால் மீது காயத்ரி ரகுராம் தெருவித்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு மீண்டும் சமூக வலைதலங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.