இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி டெல்லியில் இன்று துவங்கியது.

இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணியைச் சேர்ந்த புஜாரா-வுக்கு 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

s

35 வயதான புஜாரா இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள், 34 அரை சதங்கள் என 7,021 ரன்கள் குவித்துள்ளார்.

இதற்கு முன் 12 இந்திய அணி வீரர்கள் 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருக்கிறார்கள். புஜாரா 100 டெஸ்ட் விளையாடிய 13வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.

அவருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் நினைவுப் பரிசு வழங்கினார்.

இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி வீரர்கள் பட்டியல் :

சச்சின் டெண்டுல்கர் – 200
ராகுல் டிராவிட் – 163
விவிஎஸ் லட்சுமணன் – 134
அனில் கும்ப்ளே – 132
கபில் தேவ் 131
சுனில் கவாஸ்கர் – 125
திலீப் வெங்சர்க்கார் – 116
சவுரவ் கங்குலி – 113
விராட் கோஹ்லி – 105
இஷாந்த் சர்மா – 105
ஹர்பஜன் சிங் – 103
வீரேந்திர சேவாக் – 103