சென்னை: நடப்பாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 16வது சீசனுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. போட்டியானது அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவஹாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. அதன் முழுவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 16வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டு 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிரபல இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்தது.

ஐபிஎல் 2023 போட்டியை இணையத்தில் இலவசமாக ஒளிபரப்பவுள்ளதாக ஜியோ நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் இந்த ஆண்டு முதல் இம்பாக்ட் வீரர் என்கிற மாற்று வீரருக்கு வாய்ப்பளிக்கும் புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது. இதனால் 2023 ஐபிஎல் போட்டியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடவுள்ளது.

கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. இதே போல முதல் முறையாக கடந்த ஆண்டு சென்னை மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடப்பாண்டு  ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவனை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக எந்த அணியும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடத நிலையில், தற்போது முக்கிய மைதானங்களிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.

அதன்படி, முதல்போட்டி, மார்ச் 31ந்தேதி அன்று தொடங்குகிறது. மார்ச் 31 ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெறவிருக்கிறது.

மார்ச் 31ஆம் தேதி துவங்கும் முதல் போட்டியில் குஜராத் டைடன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. அதேபோல், இறுதிப் போட்டியும் இதே மைதானத்தில் தான் நடைபெறவுள்ளது.

அடுத்து ஏபரல் 1ஆம் தேதி நடைபெறும் இரண்டு போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா அணிகளும், லக்னோ, டெல்லி அணிகளும் மோதவுள்ளன.

ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறும் 2 ஆட்டங்களில் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸும், ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளும் மோதவுள்ளன. இதேபோல், மற்ற போட்டிகளுக்கும் முழு அட்டவணை வெளியாகியுள்ளது.

இந்த சீசனில் மொத்தம் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. லீக் ஆட்டங்கள் மே 21ம் தேதி நிறைவடைகின்றன. இறுதிப்போட்டி மே 28ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.]

கடந்த சீசனில், ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்ட் டிஸ்பிளேயின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டைட்டன்ஸ் கேப்டன் பாண்டியா 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார், ராயல்ஸ் 9 விக்கெட்டுக்கு 130 ரன்களை கட்டுப்படுத்த ஜோஸ் பட்லர் 39 ரன்களில் முக்கியமான ஸ்கால்ப் உட்பட 30 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

ஐபிஎல் 2023 குழுக்கள்:

குழு ஏ: MI, RR, KKR, DC மற்றும் LSG.

குழு பி: CSK, PBKS, SRH, RCB மற்றும் GT.

சிஎஸ்கே ஐபிஎல் 2023 அட்டவணை
⦿ போட்டி 1: மார்ச் 31, 2023 – குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மாலை 7:30 IST, அகமதாபாத்
⦿ போட்டி 2: ஏப்ரல் 3, 2023 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை
⦿ போட்டி 3: ஏப்ரல் 8, 2023 – மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை
⦿ போட்டி 4: ஏப்ரல் 12, 2023 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை
⦿ போட்டி 5: ஏப்ரல் 17, 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு
⦿ போட்டி 6: ஏப்ரல் 21, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை
⦿ போட்டி 7: ஏப்ரல் 23, 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா
⦿ போட்டி 8: ஏப்ரல் 27, 2023 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மாலை 7:30 IST, ஜெய்ப்பூர்
⦿ போட்டி 9: ஏப்ரல் 30, 2023 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், சென்னை
⦿ போட்டி 10: மே 4, 2023 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ
⦿ போட்டி 11: மே 6, 2023 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், சென்னை
⦿ போட்டி 12: மே 10, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், சென்னை
⦿ போட்டி 13: மே 14, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை
⦿ போட்டி 14: மே 20, 2023: டெல்லி கேபிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2023 அணி வீரர்கள் விவரம்:

எம்எஸ் தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷர் மத்ஷோவ், துஷர் மத்ஷோவ், துஷர் மத்கே தேஷ்பான் பத்திரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா.