விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர், இயக்குநர் எழில்.
காதலும், காமெடியும் கலந்து இதுவரை கதை சொல்லி வந்த எழில், முதன் முறையாக திரில்லர் கதையை கையில் எடுத்துள்ளார். ராஜேஷ்குமார் எழுதிய நாவல் ஒன்றை தழுவி, இந்தப்படம் உருவாகிறது.
கவுதம் கார்த்திக் தனியார் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். பார்த்திபன், காவல்துறை அதிகாரியாக தோன்றுகிறார்.
சாய்பிரியா என்ற புதுமுக நடிகையை கதாநாயகியாக இந்த படத்தில் அறிமுகம் செய்கிறார், எழில்.
சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு, புதுச்சேரி மற்றும் ஊட்டியில் நடக்கிறது. டி. இமான் இசை அமைக்கிறார்.
– பா. பாரதி