தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 10 குறைப்பு: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

Must read

சென்னை: தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 10 குறைக்கப்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அண்மைக் காலமாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது ரூ.10 குறைந்துள்ளது. தேர்தலையொட்டி சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலையும் குறைந்து வருகிறது. இந் நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் சற்று குறைக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் 2021 பிப்ரவரி மாதம் வரையிலான 3 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கூடுதலாக ரூ. 175 என்ற அளவு உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article