பெங்களூரு: பெங்களூருவில் தமிழக பெண்ணுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை பாஜக அரசியலாக்குகிறது என மாநில முதல்வர் சித்தராமையா கடுமையாக சாடி உள்ளார்.
பெங்களூருவில் பஸ்சுக்காக காந்திருந்த தமிழக பெண்ணை கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரிடம் இருந்த நகைகளையும் பறித்துச்சென்ற கும்பல் குறித்து, மாநில காங்கிரஸ் அரசை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இதையடுத்து, பாஜக இந்த விவகாரத்தை அரசியலாக்க முயற்சி செய்வதாக மாநில முதல்வர் சித்தராமையா சாடியுள்ளார்.
பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த தமிழகத்தை சேர்ந்த பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை. மகளிர் காவல் நிலையத்தில் பெண் அளித்த புகாரை தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.விசாரணையில்,சம்பவத்தன்று (19ம் தேதி) இரவு தமிழகத்தின் கிருஷ்ணகிரி பேரிகை அருகே சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 37 வயது பெண், கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருக்கு தமிழக அரசு பஸ்சில் வந்தார்.
பெங்களூருஐ டவுன்ஹால் பஸ் நிலையத்தில் இறங்கியவர், அங்கிருந்து, எலஹங்காவில் வசிக்கும் சகோதரர் வீட்டிற்கு செல்வதற்கு பி.எம்.டி.சி., பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு இரு ஆண்கள் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக தெரிகிறது.
அவர்களிடம் எலஹங்கா செல்லும் பஸ் எங்கு வரும் என்று தமிழக பெண் கேட்டார். பஸ் வரும் இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, அப்பெண்ணை இருவரும் அங்கிருந்து மிரட்டி அழைத்து சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின், அப்பெண் அணிந்திருந்த தங்க சங்கிலி உள்ளிட்ட நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரித்த போலீசார், கே.ஆர்.மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் கணேஷ், 27, சரவணன், 35 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை கையில் எடுத்த கர்நாடக மாநில பாஜகவினர், மாநில அரசையும், காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் சித்தராமையாவையும் கடுமையாக விமர்சித்தனர். மேலும் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் சித்தராமையா, ‘இந்த சம்பவத்தை பா.ஜ., அரசியலாக்க விரும்புகிறது. பா.ஜ., ஆட்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லையா?’ என கர்நாடகா முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள மாநில பாஜக, இதுபோன்ற வன்கொடுமை சம்பவத்தில் முறையான நடவடிக்கை எடுக்காமல் ‘அனைத்தையும் அரசியலாக்கி நியாயப்படுத்த பார்க்கிறார் முதல்வர் சித்தராமையா, அதற்கு அவர் ர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கர்நாடகா பா.ஜ., தெரிவித்துள்ளது.