டில்லி

காத்மா காந்தி இந்தியாவின் தேசத்தந்தை இல்லை என பாஜக தலைவர் அனில் சவுமித்ரா கூறி உள்ளார்.

மகாத்மா காந்தியை இந்தியர்கள் தங்கள் தேசத்தந்தை என புகழ்ந்து வருகின்றனர்.   அதே நேரத்தில் பாஜகவை சேர்ந்த பலரும் அவரை தாழ்த்தி பேசியும் அவரைக் கொன்ற கோட்சேவை உயர்த்திப் பேசி வருகின்றனர்.   இது குறித்த் அனந்த் குமார் ஹெக்டே, பிரக்ஞா தாகுர் மற்றும் நளின் கதீல் ஆகியோருக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநில பாஜக செய்தி தொடர்பாளர் அனில் சவுமித்ரா ஒரு தொலைக் காட்சி பேட்டியில், “மகாத்மா காந்தி இந்தியாவின் தேசத் தந்தை அல்ல.   அவர் பாகிஸ்தான் உருவாக காரனாக இருந்தார்.   அதனால வ்ரை பாகிஸ்தானின் தேசத் தந்தை என அழைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அனில் சவுமித்ராவின் இந்த பரபரப்பு பேச்சு அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது.