தமிழின் மூத்த எழுத்தாளரான கி.ராஜநாராயணனின் மனைவி, உடல்நலக் குறைவால் இன்று காலமான நிலையில், அவருக்கு நாளை புதுவையில் இறுதி அஞ்சலி நடைபெற உள்ளது.

கரிசல் மண்ணின் பாடுகளையும், வெம்மை தகிக்கும் நில மாந்தர்களின் இயல்பான வாழ்வையும் தனது எழுத்துகளில் பதிவு செய்தவர் கி.ராஜநாயாணன். கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்த இவர், எல்லோராலும் கி.ரா என்றே அழைக்கப்பட்டார். சமீபத்தில் தனது 97வது பிறந்தநாளை கொண்டாடிய கி.ரா, புதுவையில் தனது மனைவி கணவதி அம்மாள் உடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு, கணவதி அம்மாள் புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி தனது 87 வயதில் இன்று காலாமானார்.

கி.ராவின் மனைவி கணவதி அம்மாளின் இறுதிச் சடங்கு புதுச்சேரியில் நாளை மாலை 4 மணியளவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.