திருவனந்தபுரம்:

மிழகம் கேரளா இடையே உள்ள நதிநீர் பிரச்சினைகள் குறித்து பேசி தீர்க்க இரு மாநிலங்கள் தரப்பிலும் 5 பேர் கொண்டு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த குழு பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து முடிவு செய்யும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

தமிழகம் – கேரளா இடையே  முல்லைப்பெரியாறு அணை உள்பட பல நதிநீர் பிரச்சினைகள் நீண்டகாலமாக  நீடித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று தமிழக முதல்வர் திருவனந்த புரம் சென்று கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். இருமாநில அமைச்சர்கள், அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். 15ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக கூறப்பட்டது.

பரம்பிக்குளம் – ஆழியார் திட்டமட்டுமின்றி, கேரளா – தமிழகம் இடையிலான அனைத்து நதிநீர் பிரச்னை‌ளையும் சரி செய்யும் வகையில், ஆண்டுக்கு  2 முறை இருமாநில தலைமைச் செயலாளர் களும் சந்தித்து ஆலோசிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய கேரள முதல்வர் பினராயி விஜயன்,   பரம்பிகுளம் – ஆழியாறு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது  தொடர்பாக,  இரு மாநிலங்களிலும் தலா 5 பேர் கொண்ட‌குழு ஒருவாரத்தில் அமைக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.  இந்தக் குழு‌ ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் . அந்த அறிக்கை அடிப்படையில், பரம்பிகுளம் – ஆழியாறு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கூறும்போது,  சகோதரர்களாக உள்ள இருமாநில மக்களுக்கும் எந்தப் பிரச்னையும் இன்றி ‌நதிநீரை பங்கிட்டு கொள்வதற்கு இந்தப் பேச்சுவார்த்தை உதவும் என்றார்.

தமிழக – கேரள மக்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி தண்ணீரை பங்கீட்டு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கு‌ம் பேச்சுவார்த்தை வித்திட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி ‌பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.