சென்னை:

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் தலா 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, திமுக கூட்டணி சார்பில் விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குனேரியில் காங்கிரசும் போட்டியிடுகின்றன. விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார். நாங்குனேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை அறிவித்து உள்ளார். அதன்படி  விக்கிரவாண்டி  மற்றும் நாங்குநேரி தொகுதியில் தலா 5 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரரித்து  அக்டோபர் 3, 4, 17, 18, 19-ம் தேதிகளிலும்,

நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்த  அக்.5, 6, 12, 13, 14-ம் தேதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார் .