மாமல்லபுரம்:
ஜி – 20′ நாடுகள் அமைப்பின், நிலையான நிதிக்கான மூன்றாம் பணிக் குழுவினர் மாநாடு, மாமல்லபுரத்தில் இன்று துவங்குகிறது.

‘ஜி – 20’ நாடுகள் அமைப்பின் தற்போதைய தலைமை பொறுப்பை, இந்தியா வகிக்கிறது. இந்த அமைப்பில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட உறுப்பு நாடுகள் உள்ளன.

சென்னையில், கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட துவக்க நிலை மாநாட்டில், கல்வி மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, புதுச்சேரியில் அறிவியல் மாநாடு; மாமல்லபுரத்தில் ‘வசுதெய்வ குடும்பகம்’ மற்றும் பெண் பிரதிநிதிகள் பங்கேற்ற, ‘டபிள்யு- 20’ மாநாடு நடந்தது. இதில், பெண்கள் முன்னேற்றம் குறித்தான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், ‘ஜி – 20’ நாடுகள் அமைப்பின் நிலைத்த நிதிக்கான பணிக் குழுவினர் மாநாடு, மாமல்லபுரத்தில் இன்று துவங்கி நாளை மறுநாள் வரை நடத்தப்படுகிறது.