தகை

தகமண்டலத்தில் கொரோனா பரவல் காரணமாகச் சுற்றுலாத்தலங்கள் பார்வை நேரம் குறைக்கபட்ட்டுள்ளது.

மாநிலம் எங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.   இதையொட்டி தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.    ஊரடங்கில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   மேலும் கொரோனா விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்று, “நீலகீர் மாவட்டத்தில் உள்ள உதகை உள்ளிட்ட அனைத்து இடங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்   இந்த உத்தரவு நாளை முதல் அமலாகிறது.

எனவே உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா  பூங்கா, படகு இல்லம் போன்றவற்றில் மாலை 3 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.    மேலும் சுற்றுலாப்பயணிகள் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.