நாளை முதல் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல்

Must read

சென்னை

ரும் ஜூன் 10 நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது.

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைய உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 6 காலியிடங்கள் உருவாக உள்ளன.  திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர். பால சுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக்காலம் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களின் வாக்கு தேவை என்பதால், இந்த 57 இடங்களுக்கான தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.  ஜூன் 10-ம் தேதி மாநிலங்களை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளதால் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகி வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

பொதுவாக மாநிலங்களவைத் தேர்தல், சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் நடைபெறுகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கு 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு 4, எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு 2 உறுப்பினர் இடங்கள் கிடைத்துள்ளன.

திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு, சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஒப்பந்தப்படி ஒரு இடத்தை வழங்கியுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கான வேட்பாளர்களாகத் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், இரா. கிரிராஜன்,கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்ஆகியோர் அறிவிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி தனது ஒரு இடத்துக்கான வேட்பாளரையும், அதிமுக தனது 2 இடங்களுக்கான வேட்பாளர்களையும் இன்னும் அறிவிக்கவில்லை.

More articles

Latest article