சென்னை

ன்று முதல் சசிகலா தென் மாவட்டங்களில் ஒருவார காலம் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தனடனை  பெற்ற மறைந்த முதல்வரின் தோழி சசிகலா விடுதலை ஆனதில் இருந்து அதிமுகவில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் தலைவர்கள் செயல்படுவது பரபரப்பை அதிகமாக்கி உள்ளது.  

சமீபத்தில் அதிமுக பொன்விழாவில் பல சர்ச்சைகள் கிளம்பின.  பொன்விழாவையொட்டி எம் ஜி ஆர் இல்லத்தில் சசிகலா திறந்து வைத்த கல்வெட்டில் அவரை அதிமுக  பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டது சர்ச்சையை அதிகரித்துள்ளது.   அவருக்கு எதிராக அதிமுகவைச் சேர்ந்த ஜெயகுமார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் சசிகலாவின் உறவினரும் அமமுக தலைவருமான டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நாளை தஞ்சையில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க இன்று சசிகலா சென்னையில் இருந்து தஞ்சை செல்கிறார்.  அவர் வழியில் 25 இடங்களில் தொண்டர்களைச் சந்திப்பதுடன் ஒரு வார காலம் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.